Sunday, July 27, 2008

அசுர வம்சம்

வாயில் ஊற்றிய சானிப்பாலின் சிதறல்கள்
கண்ணத்தில் அள்ளிய‌ ம‌ல‌த்தின் மிச்ச‌ங்க‌ள்
ரணங்களாய் விர‌லிடுக்குக‌ளில் வாங்கிய‌ ஈய‌ குல‌ம்புக‌ளுட‌ன்
எரிந்த‌ அழுகைக‌ள் காதுக‌ளில் வெறிகொண்டடித்த‌ ப‌றையின் அதிர்வுக‌ள் நெஞ்ச‌த்தில் இது எம் பர‌ம்ப‌ரையின் நூற்றாண்டுகால‌ உயிர் மூச்சு
முடிந்துப‌டும் இந்த அழுக்காறு !!!

ஈராயிர‌ம் ஆண்டுக‌ளாய் உருப்பெற்ற க‌ருங்காட்டான்
நான்சானிப்பால் ப‌ட்ட‌ வாயில் ந‌ர‌ ந‌ரத்து மின்னும் ப‌ற்க‌ளுட‌ன்
அள்ளிய‌ ம‌ல‌க்கை காடேறிப்போன கொடுங் கூறிய‌ ந‌க‌ங்க‌ளுட‌ன்
ஈய‌ங்க‌ள் விழுந்து பாறையாகிப் போன இர‌க்க‌ ஒலி கேட்கா
காதுக‌ளுட‌ன் ப‌றையின் அதிர்வுக‌ள் பூக‌ம்பாய் தெரிக்கும் க‌ண்க‌ளுட‌ன்
இதோ வ‌ருகிறேன‌டா குடிமிக்கொத்தால‌‌ங்க‌ளா !!!

ஈராயிரமாண்டாய் அர‌க்க‌ப்பசியோடு காத்திருக்கிறேன்,
என் பசி தீர வேண்டும், தீரும்.மிஞ்சிய குடுமியுடனும்,
நட்டுக்கொண்ட (பூ)நூலுடனும் மீந்திருக்கும் கருச்சிதைவுகளே வெளி வந்து எட்டிப்பாரட !!!

1 comments:

redflame said...

அற்புதமான கவிதைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.