Monday, December 29, 2008

உரைந்த நொடிகள், இனி ஊற்றெடுக்காது

எத்தனையாவது தலைமுறை இதை எழுதுகிறது
எந்தத்தலைமுறை இதை வாசிக்கப்போகிறது ?

சாவுச்செய்திகள் உன் இதயத்தை கீறியதைவிட‌
படுகொலைக்குப் பின் வரும் கவிதை குசலங்கள்
உன்னை அதிகம் காயப்படுத்தியிருக்கும்

பரிவு, இரக்கம் என்ற சொற்களுக்குள் என்னை முடக்கிவிடாதே!
கவிதை எழுத வரவில்லை,கட்டளையிட வந்துள்ளேன்.

நாவற‌ண்டு உக்கித்துடிதுடித்துச்சாகும் பிள்ளையை காணச்சகிக்காது,
செய்ய இனி ஏதுமில்லை என்று கையறு நிலையாய்
சமைந்த தாய் போல நான்...


உன்ன‌வ‌னின் குண்டு வ‌டித்த‌ ர‌த்த‌த்தோடும்,
உன்னின் கீறிய‌ மார்புக‌ளோடும், ர‌ண‌மான‌ இர‌வுக‌ளில்
சேர்த்த‌ க‌ருவை குத்திக் க‌லைத்துவிடு
இறுகித்திரியும் எம் பிஞ்சுக‌ளின் க‌ழுத்தை நெரித்துப்போடு
எம்மை பெற்றெடுத்த‌ க‌ருப்பையை அரிந்து வீசிவிடு
என் இன‌மே ம‌ல‌டாய் ச‌மைந்துவிடு,இனி ஊற்றெடுக்காதே.

உயிர் சேர்த்து, அடைகாத்து நீ முக்கித்த‌ள்ளும் என் ம‌ருக‌ன்
பிற‌ப்ப‌து எத‌ற்காக ?
பிண‌த்தின்னிக‌ளின் ரவைகளுக்கு ப‌ழியாகவா?

பொட்டிட்டு, அழ‌கு பார்த்து 'என் ராஜாத்தி' என்று நீ கொஞ்சி
வ‌ள‌ர்க்கும் எம் ம‌ரும‌கள் ஏன் இங்கே ஜனிக்க வேண்டும்?
தாய் த‌ங்கைக‌ளையே புண‌ரும் ந‌ம் ஈன இன‌த்தின் வ‌க்கிர‌த்திற்கு
முகாம்க‌ளில் த‌ன் அவ‌ல‌த்தை 20 ரூபாய்க்கு விற்க‌வா?
பெற்ற வ‌யிற்றில் பிர‌ண்டையை க‌ட்டிக்கொள்.
எந்த‌ ம‌ழையை ந‌ம்பி ப‌திய‌ம் போடுகிறாய்.

பெற்று வ‌ளர்த்து,காவ‌ல் காக்கும் என்றெண்ணிய

புலிகள் தோழர்களையும் தின்று விட்டன எம்மையும் தின்கின்ற‌ன‌
விழுந்து‌ கிட‌க்கும் ந‌ம் பிண‌க்குவிய‌லின் மேல் இனி புலிக்கொடி ப‌ற‌க்காது

ஒவ்வொரு த‌மிழ‌னின் மிச்ச‌சொச்ச உயிரையும்,
க‌டைசி ந‌ம்பிக்கையையும்
பாலாய் குடித்து வ‌ளர்ந்த‌ ம‌ஞ்ச‌ள் துண்டு,
ச‌குனியாய் போய்விட்ட‌து எ‌ம் இன‌த்திற்கே.

எதை எண்ணிப்பூக்க‌ள் வ‌ள‌ர்க்கிறாய்,
அது பூக்க‌ள‌ல்ல,
ந‌ம் பிண‌த்திற்கு நாளை மாலைக‌ள்.

வீருகொண்டெழுந்த சிறுத்தைக‌ளும்
மூழ்கிப்போய்விட்டன அசைவத்தை
வெறுத்து
கஞ்சித்தொட்டிக்குள்.

மெதுவ‌டைக‌ளை மென்று,
ஆன‌ந்த விக‌ட‌ன் ப‌டித்து
சாவகாச‌‌மாக‌ உன் ர‌த்த‌க்க‌ண்ணீருக்கு பிச்சை போடும்
இந்த த‌மிழ்நாட்டுப்புழுக்க‌ளையா ந‌ம்பிக்க‌ருவுற்றாய்
அடி பைத்திய‌க்காரி
அட‌க்கி ஒடுக்கி நெறிக்க‌ப்ப‌டும் ஒவ்வொரு
உயிரின் க‌டைசி நொடிக‌ளும் இப்ப‌டித்தானோ!

விர‌க்தியூட்ட‌வில்லை,
கூறிவிடு ந‌ம் சொந்த‌ங்க‌ளிட‌ம்
ந‌ம்மை கொன்று தின்னும் ப‌ட்ஷிக‌ளையும்,
அத‌ன் ந‌க‌த்தை கூர்தீட்டும் பிசாசுகளின்,
நமக்கருகே சனியனாய் எழுந்து நின்று அதன்
உச்சி முனையிலிருக்கும் க‌க்ஷ்மீரி பூக்களிலும்
குருதி குடிக்கும் காட்டேரியின் ர‌த்த‌ம் குடிக்கும்
காட்டேரியாகிவிட்டேன் நான்‌
முடிந்தால் சுடுகாட்டில் ச‌ந்திப்போம்,இனி முகாம்க‌ளில் அல்ல‌.

2 comments:

RV said...

sukran enpavan guru,

Ennayya muttaalthanatthukku oru limitte illaiyaa?

Today I saw that you have posted comments about my post "parppanar, parppaneeyam..." on Dr. Rudhran's blog. The same comments have been cut/pasted on vinavu, kalagam blogs as well. What do you expect? That I would actively search all blogs for your comments on my posts and answer them? If you want to give feedback on my post, reply to that post!

porattamtn said...

//ஒவ்வொரு த‌மிழ‌னின் மிச்ச‌சொச்ச உயிரையும்,
க‌டைசி ந‌ம்பிக்கையையும்
பாலாய் குடித்து வ‌ளர்ந்த‌ ம‌ஞ்ச‌ள் துண்டு,
ச‌குனியாய் போய்விட்ட‌து எ‌ம் இன‌த்திற்கே.

எதை எண்ணிப்பூக்க‌ள் வ‌ள‌ர்க்கிறாய்,
அது பூக்க‌ள‌ல்ல,
ந‌ம் பிண‌த்திற்கு நாளை மாலைக‌ள்.

வீருகொண்டெழுந்த சிறுத்தைக‌ளும்
மூழ்கிப்போய்விட்டன அசைவத்தை
வெறுத்து
கஞ்சித்தொட்டிக்குள்.

மெதுவ‌டைக‌ளை மென்று,
ஆன‌ந்த விக‌ட‌ன் ப‌டித்து
சாவகாச‌‌மாக‌ உன் ர‌த்த‌க்க‌ண்ணீருக்கு பிச்சை போடும்
இந்த த‌மிழ்நாட்டுப்புழுக்க‌ளையா ந‌ம்பிக்க‌ருவுற்றாய்//

நன்று.