ஈழத்தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் நோக்கத்துடன் சிங்கள பாசிச பேரினவாத அரசு போரை வெறித்தனமாக நடத்துவதன் மூலம் கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது. இந்த இன அழித்தொழிப்பு யுத்தத்திற்கு இந்திய அரசு நேரடியாக உதவி செய்கிறது என்பதை விட இந்திய அரசு தான் இந்த இனப்படுகொலை யுத்தததயே நடத்துகிறது என்று சொல்லலாம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துகிற எந்த் கட்சியும், எந்த அமைப்பும் இந்திய அரசின் இந்த பயங்கரவாத செயலை தங்களுடைய போராட்டங்களின் மூலம் அம்பலப்படுத்துவதில்லை மாறாக இந்திய அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு தான் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் இன்று வரை இந்திய அரசு ஒரு சிங்களவனின் மயிரைக்கூட பிடுங்கவில்லை. இவர்களும் இந்திய அரசுக்கு ஆபத்தில்லாத வகையில் தான் தங்களுடைய போராட்டத்தை நடத்துகின்றனர். தங்களிடம் உள்ள பல []களை வைத்துக்கொண்டு இவர்களாலும் இது வரை ஒன்றயும் புடுங்கமுடியவில்லை, பிறகு எதற்கு []கள்?. []கள் அந்த நலன் தான் இவ்ர்களுடைய போராட்டத்திற்கு எல்லைக்கோடாக இருக்கிறது மாறாக ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும் நடத்திய ஆர்ப்பாட்டம் இந்திய அரசின் அரவனைத்து முதுகில் குத்தும் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு நண்பனல்ல எதிரி என்பதை ம.க.இ.க இப்பொழுது ஒன்றும் புதிதாக கண்டுபிடித்து கூறவில்லை. ஈழப்பிரச்சனையில் இந்தியாவை பற்றி இதுதான் எமது அமைப்பின் நிலைப்பாடு என்பதை தொடர்ச்சியாக எம்மை கவனிப்பவர்கள் அறிவார்கள்.
ஆர்ப்பாட்டக்காட்சிகள்
1 comments:
துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள
Post a Comment