Thursday, January 29, 2009

ஈழத்தில் இந்திய அரசு நடத்தும் இன அழித்தொழிப்பு

இதில் நம் தமிழ் மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரும், மனிதநேயம் உள்ள மனிதன் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மறியல் இடம் ரிப்பன் மாளிகை அருகில் காலை 10.30 மணிக்கு

அன்பார்ந்த நண்பர்களே நம் தமிழ் மக்கள் ஈழத்தில் கொண்றொழிக்கப்படுகிறார்கள். நீங்கள் யாராக வேண்டுமானாலும், இருக்கலாம் நம் இனம் வரலாற்றில் துடைத்து எறியப்படுகிறது இதை யாராலும் பார்த்து பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. நாம் இங்கிருந்து கொண்டு செய்ய முடிவது ஒன்று மட்டும் தான், இந்த இனப்படுகொலை போரில் சிங்கள பாசிசத்துக்கு பங்காளியாக கொலைக்களத்தில் நின்று ரத்தம் குடிக்கும் இந்திய அரசின் பயங்கரவாதத்தை நடுவீதிகளில் இறங்கி நம் மக்கள் முன் அம்பலப்படுத்தி இந்திய அரசின் துரோகத்தனத்தை தோலுரித்து காட்ட வேண்டியது நமது கடமை அதை இங்கு யாரும் செய்யாத நிலையில் ம.க.இ.க வின் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி நாளை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை எதிரில் சாலையில் அமர்ந்து மறியலை நடத்த இருக்கிறது. இதில் நம் தமிழ் மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரும், மனிதநேயம் உள்ள மனிதன் ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் சாலைகளில் அமர்ந்து இருப்போம். வாருங்கள் தோழர்களே...


பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:
கொலைகாரன் மன்மோகன் சிங்கே,உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?
இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசியமேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்குரல் கொடுப்போம்!


நன்றி
R.S.Y.F




ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

Tuesday, January 27, 2009

ஈழம் : போரை நடத்துவது இலங்கை அரசு அல்ல, இந்திய அரசு

ஈழத்தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் நோக்கத்துடன் சிங்கள பாசிச பேரினவாத‌ அரசு போரை வெறித்தனமாக நடத்துவதன் மூலம் கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது. இந்த இன அழித்தொழிப்பு யுத்தத்திற்கு இந்திய அரசு நேரடியாக உதவி செய்கிறது என்பதை விட இந்திய அரசு தான் இந்த இனப்படுகொலை யுத்தததயே நடத்துகிறது என்று சொல்லலாம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துகிற எந்த் கட்சியும், எந்த அமைப்பும் இந்திய அரசின் இந்த பயங்கரவாத செயலை தங்களுடைய போராட்டங்களின் மூலம் அம்பலப்படுத்துவதில்லை மாறாக இந்திய அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு தான் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் இன்று வ‌ரை இந்திய அரசு ஒரு சிங்களவனின் மயிரைக்கூட பிடுங்கவில்லை. இவர்களும் இந்திய அரசுக்கு ஆபத்தில்லாத வகையில் தான் தங்களுடைய போராட்டத்தை நடத்துகின்றனர். தங்களிடம் உள்ள பல []களை வைத்துக்கொண்டு இவர்களாலும் இது வரை ஒன்றயும் புடுங்கமுடியவில்லை, பிறகு எதற்கு []கள்?. []கள் அந்த நலன் தான் இவ்ர்களுடைய போராட்டத்திற்கு எல்லைக்கோடாக இருக்கிறது மாறாக ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக‌ளும் ந‌ட‌த்திய‌ ஆர்ப்பாட்ட‌ம் இந்திய‌ அர‌சின் அர‌வ‌னைத்து முதுகில் குத்தும் துரோக‌த்த‌ன‌த்தை அம்ப‌ல‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து. இந்திய‌ அர‌சு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ண்ப‌ன‌ல்ல‌ எதிரி என்ப‌தை ம‌.க‌.இ.க‌ இப்பொழுது ஒன்றும் புதிதாக‌ க‌ண்டுபிடித்து கூற‌வில்லை. ஈழ‌ப்பிர‌ச்ச‌னையில் இந்தியாவை ப‌ற்றி இதுதான் எம‌து அமைப்பின் நிலைப்பாடு என்ப‌தை தொட‌ர்ச்சியாக‌ எம்மை க‌வ‌னிப்ப‌வ‌ர்க‌ள் அறிவார்க‌ள்.





ஆர்ப்பாட்டக்காட்சிகள்














Thursday, January 22, 2009

இடையன்

நம் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒதிங்கிப்போவதல்ல, போராட்டமே !தொழிலாளிகள் மாநாடு இதற்கு ஒரு முன்னோட்டமே !



இடையன் கவிதை

பத்துமாதம் பதியம் போட்டாள் என்னை
அங்கே மகிழ்ச்சியும் இல்லை, துயரமும் இல்லை...
இருந்து கிடந்தேன் அவ்வளவே.

போதும் பொறுத்தது பிடுங்கி எடுத்தார்கள்
கதறினேன், அரற்றினேன் கேட்பாரில்லை.
அன்று அவளின் வெப்பமூச்சு நெருக்கத்தில்
என் அழுகையை விரட்டிவிட்டேன்

எங்கள் வீட்டுச்செடி மூன்று இலை விட்டது
மஞ்சள் பைகள் என் தோள்களில் சேர்ந்து கொண்டது.
சிகரம் தேடிய வானம்பாடிக்கு நடைபயிற்றுவித்தனர்.
மிச்சமும் மீதியுமாய் இருக்க வாழக்கற்றுத்தர வேண்டியவர்கள்
படித்ததை வாந்தியெடுக்க கற்றுக்கொடுத்தார்கள்.
என்னைச்சுற்றி வானத்துக்கும் பூமிக்குமாய்
கம்பிகள் நீண்டுகொண்டிருந்தன.
சிறைக்குள்ளும் பூக்கள் பூத்தது.
அடிபிடி சண்டைகளும், எச்சில் மிட்டாய்களும் என்
மகிழ்ச்சி அறையில் வாசம் செய்தன.

கண்ணாடியை என் பிம்பங்கள் அழுத்திக்கொண்டிந்த நேரம்
அவளின் வருகைக்காக காத்திருந்த நொடிகளையும்
தலை சாய்த்து சிரித்த பொழுதுகளையும்
பொறுக்கிச் சேர்த்தேன் மகிழ்ச்சிப்பைகளுள்
என் அந்திமா காலத்திற்கு தேவைப்படும் என்று.
இன்பத்தின் பொருள் கண்டேன், கூடவே
துன்பத்தின் பின்சேர்க்கையும்.

அழகிய நிர்வாணம் கலைந்து ஆடை உடுத்தச் சொன்னது காலம்.
அழுந்தும் சமூக பெருஞ்சக்கரத்தினுள் இழுத்துத் தினித்தனர்.
வர்ணங்கள் பூசி விட்டனர், முகவிலாசம் தேடச்செய்தனர்.
என் மகிழ்ச்சிப்பைகளை தட்டி கீழிடச் செய்த‌னர்.
அறைகளில் வாசம் செய்தவர்களைப்பிடித்துத்
தள்ளி கதவைச்சாத்தினர்.
உலகம் இருண்டது, என் மனதும் தான்.

கதறிக்கிடந்த என்னை, பிழைத்துக்கொள்
என்று கைகுட்டை கொடுத்து துடைக்கச்சொன்ன‌ன‌ர்.
தாலி கட்டி, தாரம் வாங்கி தாச‌த்தனம் செய்யக்கூறினர்.
சிரி என்று மிரட்டிப்பார்த்தனர்.

கிழித்து எறிந்தேன், காறி உமிழ்ந்தேன்.
நக்கித்திங்கும் பிண‌ந்தின்னிகளை அடித்து விரட்டினேன்.
அடைகாத்த அழுகிய கருப்பையை உடைத்து கிழித்து
வெளியேறினேன்.

வெறிகொண்டு அங்கும் இங்கும் ஓடினேன்.
மண்ணில் புரண்டு துலாவினேன்.
என் பைகளை என் தம்பிகள் எடுத்திருந்தனர்.
அறைகளை பக்கத்துவீட்டுச்சிறுவர்கள்...

ஊளையிடும் பேய்க்காற்றாய் அடித்துகொண்டிருந்தேன்.
இலக்கற்றிருந்த நான் பரந்த வெளிகளில்
வான் முட்டும் மலைகளில், குறுகிய சந்துகளில்,
அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் அடித்துத்திரிந்து
சோர்ந்து அடக்கப்பட்ட நேரத்தில்
மையிருட்டின் நடுவே ஒரு செவ்வொளியை கண்டேன்.
பத்து நாள் பட்டினி கிடந்த மிருகமாய்
விரைந்து போனேன், நெருங்க நெருங்க‌
என் கந்தல்கள் காற்றில் கரைந்தன,
கிழிசல்கள் பறந்து போயின.
நான் நிர்வானமாகிக்கொண்டிருந்தேன்.
காற்றின் உதடுகள் மெல்லப்புன்னகைத்தன.

இன்று என் மகிழ்ச்சியை மூட்டை தூக்குபவனோடும்,
எண்ணெய் காணா தலைகளோடும், நாற்று நடும்
பெண்களோடும் பொறுத்திக்கொண்டேன்.

பட்டாடை போட்ட ராஜாவைப்பார்த்த‌
உங்களுக்கு என் நிர்வாணம் தெரியாது.

மனிதனைப் பக்கத்து வீடுகளில் தேடும்
உங்களுக்கு என் நிர்வாணம் தெரியாது.

வீரர்களை நிலைக்கண்ணாடியில் பார்க்கத்தவறிய‌
உங்களுக்கு என் நிர்வாணம் தெரியாது.

ஏழு பிறப்பெடுத்தேன் என் வாழ்வில்
எட்டுத்திக்கும் பறந்து போனேன்,
நுகர்ந்தேன், சுவைத்தேன், களித்தேன், இனித்தேன்
இவையெல்லாம், தன் துன்பத்தின் காரணியறியா
கல‌ங்கும் நெஞ்சத்திற்காக போராடும் நொடிகளினும்
பெரிதன்று.

அய்யா நீங்கள் காத்திருக்க நான் முதல்வனுமல்ல,
உதாசினப்படுத்திப்போக கடையனுமல்ல,
இடையன்.

எங்கே தேடிகொண்டிருக்கிறீர்கள் என்னை
விலாசம் தேவையில்லை.

மக்கள் கூடும் சாலைகளில்
எண்ணெய் வழியும் நெற்றியோடும்,
வழித்துசீவிய முடியோடும்
செஞ்சட்டையணிந்து இறுகப்பிடித்த செங்கொடியுடன்
முழங்கிக்கொண்டிருப்பேன்
"புரட்சி ஓங்குக" என்று.